Monday 29 July 2013

இனந்தெரியாத இணையம். [the deep web] தமிழ் Security

வணக்கம். வாசகப்பெருமக்களே... கிட்டத்தட்ட வருடங்கள் ஆகிவிட்டன நான் பதிவிட்டு. எல்லோரும் என்மீதும் தமிழ் Security குழு மீதும் கடும் கோபத்தில் இருப்பீர்கள் என்பதில் எந்தவிதமான ஜயமும் இல்லை. சரி நாம் விடையத்திற்கு வருவோம். 

இது என்ன இனந்தெரியதா இணையம்? நீங்கள் யோசிக்கலாம். இந்த இனம் தெரியா இணையம் என்பது நாம் உலாவும் Clean Webனை விட கொஞ்சம் உள்ளகத்தே சென்று அலசிப்பார்க்க வேண்டிய ஒன்று. அதாவது, கூகுள், பிங், யாகூ போன்ற சாதாரண இணையத்ததேடுதளங்கள் அல்ல தேடு பொறிகளில் சிக்காமல் மறைந்திருக்கக்கூடிய தகவல்களில் தொகுப்பு தான் இந்த Deep web அல்லது Invisible web.  யாராவது வந்து உங்களிடம் தம்பி நீங்கள் நடக்கும் நிற்கும் இந்த நிலத்திற்கு கீழ் ஓர் பெரிய சாம்ராஜ்யம் இருக்கின்றது. எங்களைவிட அங்கு பெரிய அளவிலான மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்றால் உங்கள் வாயை ஆ.... என எவ்வாறு பிளப்பீர்களோ அப்படித்தான் இந்த விடையமும். நாம் அறியாமலேயே ஓர் நிழல் இணையம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. 

உதாரணத்திற்கு கீழே ஓர் படம் வழங்கியிருக்கின்றேன். பார்த்து விளங்கிக்கொள்ளுங்கள். 


மேலே படத்தில் காட்டப்பட்டிருப்பது போன்று நாம் உபயோகிப்பது கடலின் மேற்பகுதியான குறிப்பிடப்பட்டிருக்கும் Clean Web. இந்த வலையமைப்பில் நாம் உலா வந்து கொண்டிருக்கின்றோம். இனி கடலில் ஆழமான பகுதிக்கு செல்லலாம். (மரியான் தனுஸ் மாதிரி மூச்சை புடிச்சு வைச்சுக்கொள்ளுங்க).

சரி. இந்த Deep Webல் அப்படி என்னதான் இருக்கின்றது? ஏன் இதனை நாம் சாதாரண இணையத்தினை பார்வையிடுவது போன்று பார்வையிட முடியாமல் உள்ளது? போன்ற  சில பல கேள்விகளுக்கு விடையளிக்க முனைந்தோமானால் இந்த கம்ப சூத்திரத்தினை தெளிவுபடுத்திவிடலாம். இந்த Deep Webல் தான் கொந்தர்களும் அரசாங்கத்தின் இரகசிய தகவல்களும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக தடைசெய்யப்பட்ட பாலியல் தகவல்கள் மற்றும் படங்களும் கொட்டிக்கிடக்கின்றன. பல்வேறு நாடுகளின் அதி முக்கியமான தகவல்கள் மற்றும் செய்திப்பரிமாற்றங்கள் இந்த Deep Web ஊடாகவே நடைபெறுகின்றன. அத்துடன் தடைசெய்யப்பட்ட Child Sex படங்கள், வீடியோக்கள் என்பனவும் போதை பொருள் விற்பனை, ஆயுத விற்பனை, போன்றவற்றிக்கும் இந்த Deep Webல் நிறைய இடமுண்டு. சற்று யோசித்துப்பாருங்கள் உங்களை தண்டிக்கவே கேள்வி கேட்கவோ யாரும் இல்லாத ஒரு உலகம். நீங்கள் நினைத்ததை செய்யக்கூடியது மாதிரியான ஓர் உலகம். என்றால் எங்கள் மனப்போக்கு எப்படி இருக்கும்? எது செய்யக்கூடாது என்று எண்ணி இருந்தோமோ உடன் அதை செய்து பார்த்தால் தான் என்ன என்று மனம் ஆர்ப்பரிக்கும். அப்படித்தான் Deep Web ம்.


சரி. இனி எமது பக்க வாசகர்களுக்கு பிடித்தமான பகுதி. ஆம். எவ்வாறு இந்த Deep Web இனை நாம் சென்று சேர்வது? அங்கும் ஏதாவது தேடுபொறிகள் இருக்கின்றனவா அதாவது கூகிள் போன்றவை. அப்படி என்றால் அவற்றினை எவ்வாறு தேடிக்கண்டு பிடிப்பது?

அவசரப்பட வேண்டாம்.  ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம். முதலில் Deep Web ,இனை பயன்படுத்தும் போது நாம் Proxy ஒன்றினை உபயோகிப்பது எமக்கு நல்லது. அத்துடன் Deep Webல் தகவல்களை பார்த்து பெற்றுக்கொள்ளுவதற்குத்தான் ஓர் தளம் உள்ளது அது தான் The Hidden Wiki. இத்தளத்தினில் Deep Webல் என்ன என்ன எங்கு புதைந்து கிடக்கின்றது என்று பட்டியலிட்டிருக்கின்றார்கள். ஆனால் அத்தளத்திற்கு சாதாரணமாக செல்ல முடியாது. அத்தளத்திற்கு செல்வதற்கான வளிமுறைகள் இதோ!

முறை-01

1. கீழ்க்காணும் இணைய முகவரியினுாடாக நீங்கள் The Hidden Wiki இணையத்தினை அணுகலாம். ஆனால் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செல்லும் அல்லது பார்க்கும் தளங்கள் கண்காணிக்கப்படலாம். சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

http://kpvz7ki2v5agwt35.onion.to/wiki/

இந்த தொடுப்பு  வேலை செய்யாத சந்தர்ப்பத்தில் கீழ்க்காணும் முகவரியினை உபயோகப்படுத்தி நீங்கள் இத்தளத்தினும் நுழையலாம்.

http://kpvz7ki2v5agwt35.tor2web.org

முறை- 02
உங்கள் கணனியில் TOR மென்பொருளினை பதிவிறக்கி கொள்ளுங்கள். பதிவிறக்கி நிறுவிய பின்னர் நீங்கள் அந்த மென்பொருளினுாடகவும் கீழ்க்காணும் தளத்தினை அடையலாம்.


படத்தில் காட்டியது போன்று Start Tor Browser என்பதில் இருமுறை சொடுக்குவதன் மூலம் நீங்கள் இந்த மென்பொருளினை இயக்கலாம்.


மென்பொருள் இயங்கி Connected to tor network என்று காட்சியளிக்கும் போது ஓர் இணைய உலாவி இயங்கும். அந்த உலாவியின் மூலமாக நீங்கள் இணையத்தில் ஓர் அனோனியான வலம் வரலாம்.


http://kpvz7ki2v5agwt35.onion

இந்த மென்பொருளின் உதவியுடன் .Onion என்று முடிகின்ற தளங்களுக்கு நீங்கள் எந்தவிதமான Web Proxyகளின் உதவியும் இல்லாமல் நேரடியாக பார்க்கமுடியும். சரி அது என்ன .onion என்று முடிகின்ற இணையத்தளங்கள்? பார்த்து விடலாம்.


.Onion தளங்கள்
இந்த தளங்களினை நாம் சாதாரணமாக இணையத்தளங்களினை பார்வையிடுவது போன்று பார்வையிட முடியாது. என் எனில் இத்தளங்கள் அனைத்தும் Tor என்று அழைக்கப்படுகின்ற ஓர் வலைப்பின்னலில் உள்ளடங்கியுள்ளன. ஆக நீங்கள் இத்தளங்களினை நேரடியாக பார்க்க விரும்பினால் மேற்குறிப்பிட்ட இரண்டாவது முறை மூலமாக பார்க்கலாம்.

சரி. இந்த பதிவு நீண்டு கொண்டே செல்கின்றது. இதன் இரண்டாவது பகுதியில் Deep Web ல் எவ்வாறு முக்கியமாக தகவல்களினை திரட்டுவது என்னமாதிரியான விடையங்களினை செய்யலாம்? எப்படி தகவல் திருட்டில் ஈடுபடலாம். போன்ற பல சுவாரஸ்ஸமான விடையங்களை கலந்துரையாடலாம் என்றிருக்கின்றேன். பார்க்கலாம். மிக விரைவில் எதிர்பாருங்கள் இரண்டாவது பகுதியினை...

இந்த Deep Web பார்வையிட்டு விட்டு வந்தவர்களுக்கு பின்வரும் படம் சமர்ப்பணம். :P



நன்றி
Spiderboil66



குறிப்பு:  இந்த பதிவில் நான் சில விடையங்களினை மேலோட்டாக தான் கூறியிருக்கின்றேன். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் எனக்கு மின்னஞ்சல் செய்யவும். அத்துடன் Deep Web என்கிற பெரிய விடையத்தினை குறிப்பாக தொழிநுட்ப விடையங்களினையும் அதனுள் பொதிந்து கிடக்கும் விடையங்களினையும் திரட்டி எழுத இன்னும் பல பதிவுகள் போட வேண்டும். சரி. இறுதியாக ஞாகபம் வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இங்கு வழங்கப்படும் செயன்முறைகள் மற்றும் விளக்கங்கள் கல்வி நோக்கத்திற்கு மட்டுமே. அதனை நல்ல முறையில் பயன்படுத்தவும்.







3 பின்னுாட்டங்கள்:

  1. மிகவும் அருமையான பதிவு நண்பா..!
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..! உங்கள் அடுத்த பதிவுகளை ஆவலோடு எதிர்பார்கிறேன்.

    நீங்கள் முன்னைய "இணைய தாக்குதல்" தொடரில் குறிப்பிட்டுள்ள பிஷிங் தகவல் திருட்டு முறையை சோதித்து பார்க்க நீங்கள் பரிந்துரைத்த hosting தளத்திற்கு சென்றால் அதில் எமது கணக்கை login செய்ய விடுவதில்லை. தயவு செய்து இன்னுமொரு தளத்தை அறியத்தரவும்.

    இணைய தாக்குதல் தொடர் பதிவின் அடுத்த பகுதிகளையும் உங்கள் தளத்திற்கே உரிய தனித்துவமான விறுவிறுப்பு பதிவுகளையும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.

    தயவு செய்து உங்கள் பதிவுகளை விரைவாக வழங்குங்கள். வாரத்திற்கு ஒரு பதிவாவது இட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். இயலுமானவரை உங்கள் பதிவுகளை விரைவாக இடுக்கையிடுமாரும் வேண்டுகிறேன்.

    நன்றி..!

    ReplyDelete
  2. Abdul Basith, பதிவுகளை வேகமாக இடுவதற்கு முயற்சி செய்கின்றோம். 000webhost.com என்னும் சேவையினை பயன்படுத்திப்பாருங்கள். நன்றி.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பதிவு .... ur mail id pls,...

    ReplyDelete