கடந்த எமது இந்த இனந்தெரியாத இணையத்தின் முதலாம் பகுதியில் இந்த இணையம் என்றால் என்ன என்றும் அத்துடன் இந்த இணையத்தில் எந்த மாதிரியான விடையங்கள் புதைந்து கிடக்கின்றன என்றும் நாம் பார்த்திருந்தோம். இந்த பகுதி இரண்டில் நாம் இந்த இனந்தெரியாத இணையத்திலே என்ன மாதிரியான தளங்கள் இருக்கின்றன என்றும் அத்துடன் குறித்த தளங்களில் நாம் என்ன என்ன விடையங்களை செய்ய முடியும் என்றும் பார்க்கலாம். அதற்கு முதல் கடந்த சில வாரங்களுக்கு சேரன் இளைய மகள் காதல் விவகாரம் சூடு பிடித்திருந்த வேளையில் எங்கள் TamilSecurity குழுவின் வாலு InjectB அவர்கள் சேரனின் இளைய மகளின் முகப்புத்தகத்தினுள் நுழைந்து ஓர் தேடுதல் நடத்தியிருக்கின்றார். மறுநாள் காலை என்னை அலுவலகத்தில் சந்தித்தபோது ஓடி வந்து, அண்ண, அவளுடை Facebookல ஒன்னுமே இல்லனா. வெறும் i love youவா எழுதிக்குமிச்சு வச்சுருக்கா என்றார். எனக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை. அவர் வேறு ஏதும் வித்தியாசமாக எதிர்பார்த்து போயிருப்பாரோ என்னமோ? அவருக்குத்தான் வெளிச்சம். ஆனால் ஊடகங்களுக்கு வழங்கக்கூடியது போன்று எந்த விதமான விடையங்களும் அதில் சிக்கவில்லை என்பது தான் உண்மை. அங்கிருக்கும் படங்களை தவிர. சரி சரி. என்ன பதிவு தலைப்பைவிட்டு இவன் சினிமா பற்றி அளக்கிறான் என்று ஜோசிக்க வேண்டாம். சும்மா உங்கள இந்த சீரியஸ் உலகத்திற்கு அழைத்துச்செல்வதற்கு முதல் கொஞ்சம் உங்களை சிரிக்கவைக்கலாம் என்று தான்.
சரி. மக்களே இந்த இனந்தெரியாத இணையம் பற்றியும் அதனுள் இருக்கும் ஓர் தளமாகிய HiddenWiKi பற்றியும் நாம் பார்த்திருந்தோம். சரி. இந்த இனந்தெரியாத இணையத்தில் அப்படி என்னதான் இருக்கின்றது என்று இவன் இந்த மாதிரி பில்டப் எல்லாம் குடுக்கிறான் என்று ஜோசிக்கலாம். கிட்டதட்ட ஓர் நிழல் உலகமே இதனுள் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த இணையத்தில் தான் போதைபொருள் வியாபாரம் தொடக்கம், சிறுவர்கள்களின் பாலியல் துஸ்பிரயோக படங்கள், திருடி விற்கப்படும் கணனிகள், கையடக்க தொலைபேசிகள், விலைமாதர்கள், ஆட்கொல்லும் முகவர்கள் அப்பிடி என்று வகைப்படுத்தமுடியாததும் குறுப்பிட முடியதாததுமான விடையங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
உதாரணத்திற்கு உங்களுக்கு ஓர் வெடிபொருள் செய்வதற்கு விருப்பம். நான் இங்கு வெடிபொருள் என்று சொல்லவது தீபாவளி பட்டாசு அல்ல. நிஜாமான வெடிகுண்டு. உங்களிடம் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களே உள்ளன. கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையான அத்தனை வழிமுறைகளையும் இங்கு உங்களுக்காக வழங்குகின்றார்கள். அத்துடன் ஆரம்பத்திலிருந்து படிமுறை வாயிலாக அதன் செயன்முறை விளக்கமும் இலவசமாக புத்தமாக கிடைக்கின்றது. அத்துடன் நின்று விடாமல் துப்பாக்கிகள் பற்றியும் அவற்றினை எவ்வாறு உபயோகிப்பது என்றும் அவற்றினை கழற்றி மீண்டும் பொருத்துவது பற்றியும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து எழுதியிருக்கின்றார்கள். என்ன எல்லாரும் தான் சொல்லாம் ஆனால் ஆதாரம் இல்லாவிடின் நாங்கள் நம்பமாட்டோம் என்கிற எமது வாசகர்களுக்கு கீழே இருக்கும் சில மின் புத்தகங்கள் நம்பிக்கை தரும். பிள்ளைகளே தயவு செய்து ஞாபகம் வைத்திருங்கள் நான் வழங்கும் அத்தளை வளங்களும் கல்விநோக்கத்திற்கே. தயவு செய்து நல்ல முறையில் பயன்படுத்துங்கள்.
இது போன்று இன்னும் பற்பல வளங்கள் நிறைந்து கிடக்கின்றன இந்த இனந்தெரியாத இணையத்தில். நான் குறிப்பிட்டதை போன்று இந்த ஆயுதங்கள் பற்றி உங்களுக்கு இன்னும் ஏதும் தகவல்கள் அல்லது புத்தகங்கள் தேவைப்படின் நீங்கள் கீழ்க்காணும் இணைய முகவரிக்கு செல்லும் பட்சத்தில் அவற்றினை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆயுதங்கள் பற்றிய புத்தகங்களை பதிவிறக்க {Need TOR to access the site}
சரி. இது ஆயுதங்கள் சம்பத்தமான புத்தகங்களினை பார்த்தோம். ஆனால் இனி நாங்கள் ஆயுதங்கள் பற்றி பார்க்கப்போகின்றோம். ஆமாம். இந்த இனந்தெரியாத இணையத்தில் கிடக்கும் ஆயுத விற்பனை பற்றி பார்க்கலாம். கிட்டதட்ட சிறியரக கைத்துப்பாக்கி தொடக்கம் பெரிய விமான எதிர்ப்பு ஆயுதங்கள் வரை அனைத்துமே இணையத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜரோப்பா நாடுகளுக்கு பீட்சா டெலிவரி மாதிரி செய்கிறார்கள். இங்கு உங்களுக்கு சில தளங்களில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் துப்பாக்கிகள் உங்கள் பார்வைக்கு [சத்தியமா இது விஜய்யின் துப்பாக்கி இல்லை ]
வெறுமனயே 500 பவுண்டுகளுக்கு நீங்களும் ஓர் துப்பாக்கி வாங்கி சுடலாம். அனேகமாக தரங்கெட்ட தமிழ் தளங்கள் பகுதியில் சாடப்பட்ட தளங்கள் எமக்காக ஒன்றினை வாங்கி வைத்திருப்பார்கள் என்று எண்ணுகின்றேன். சரி. இப்படி ஏகப்பட்ட தளங்கள் இருக்கின்றன. எல்லா தளங்களையும் ஓர் பட்டியலிட்டு கீழே தருகின்றேன்.
சரி. இந்தளவு நேரமும் நாங்கள் துப்பாக்கிகள் பற்றிப்பார்த்தோம். இனி போதைப்பொருட்கள் பற்றி பார்த்தோம். சென்ற பதிவில் நாம் SILKROAD என்கிற ஓர் தளத்தினை பற்றிப்பார்த்திருந்தோம். எழுதியதாக ஓர் ஞாபகம். இல்லாது போயின் மன்னித்துக்கொள்ளுங்கள். சரி. இந்த SilkRoad இணையத்தளம் தான் போதைபொருள் வியாபாரத்தில் இந்த இருண்ட இணையத்தில் யாம்பவான். பலவிதமான போதைப்பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. அப்ப எங்களுக்கு SnakeBite Drugக்கும் கிடைக்குமா என்று கேட்கலாம் நீங்கள். அதற்கு நீங்கள் SilkRoad போகத்தேவை இல்லை. Amazon காடுகளுக்கு தான் செல்ல வேண்டும். இந்த குறித்த இணையத்தின் மூலமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பொருட்கொள்வனவில் ஈடுபடுகின்றனர்.
போதைப்பொருட்களுடன் மட்டும் நின்றுவிடாமல் நான் முன்கூறியது போன்று ஜபோன்கள் உட்பட பல பல இலத்திரனியல் சாதனங்கள் சந்தை விலையை விட மலிவாக கிடைக்கின்றது. அதற்காக தொடுப்புக்கள் கீழே..
சரி. அனேகமாக இப்பொழுது உங்கள் கொஞ்சம் தெளிவு வந்திருக்கும் என்று நினைக்கின்றேன் இந்த தலைப்பு பற்றி. இன்னமும் என்னடா நடக்குது இங்க என்று குழம்பிப்போயிருப்பவர்கள் இப்பொழுதே TOR உதவியுடன் இந்த இருண்ட இணையப்பகுதிக்குள் நுழைந்து பாருங்கள் அப்பொழுது புரியும். எல்லாம் சொன்னீங்க ஆனா பணப்பரிமாற்றங்கள் என்னமாதிரி இந்த இணையப்பகுதியில் என்று சொல்லவேயில்லை என்று நினைக்கலாம். ஆம். இங்கு Bitcoin என்று சொல்லப்படுகின்ற ஓர் Payment Gatewayஇனை பயன்படுத்துகிறார்கள். இங்கு நீங்கள் ஓர் கணக்கினை ஏற்படுத்திக்கொண்டீர்களானால் நீங்களும் இதனை உபயோகப்படுத்தி பொருட்கொள்வனவில் ஈடுபடலாம். ஆனால் அவதானம் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இந்த bitcoin ஆனது P2P என்கிற தொழில்நுட்பம் வாயிலாக இயங்குகின்றது. இது என்ன தொழில்நுட்பம் என்று அறிய வேண்டியவர்கள் தயவு செய்து Mr.Google உதவியை நாடவும். சரி. இத்துடன் சில இருண்ட இணையங்களுக்கான தொடுப்புக்களை வழங்கு இந்த பதிவை முடிக்கலாம் என்று நினைக்கின்றேன். உங்களுக்கு ஏதெனும் சந்தேகங்கள் இருப்பின் Comment பகுதியில் கேட்கவும். மின்னஞ்சலினை விட இலகுவான வழி.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபாராட்டுகள் நண்பா....! உங்கள் பதிவுகளை இன்னும் விரைவாக இட முயற்சியுங்கள். உங்கள் விறுவிறுப்பு தொடரான 'இணைய தாக்குதல்' தொடரையும் தொடருங்கள். அதையும் எதிர்பார்த்திருக்கிறேன். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...!!!
ReplyDelete>>>உங்கள் தளத்தின் முகப்பில் post-கள் தெரிவதில்லை. ஒரே ஒரு post மட்டுமே தெரிகிறது.<<<
ஒரு சந்தேகம்..! நான் blogger-இல் ஒரு ப்ளாக் ஒன்று ஆரம்பித்தேன். நான் ஆரம்பிக்க பயன்படுத்திய gmail account-இன் password மறந்துவிட்டது. எந்த recover ஏற்பாட்டையும் நான் செய்யவில்லை. எனது blog-ஐ மீட்க முடியுமா...?
contact email- basith250 (at) gmail (dot) com
நன்றி...!
அருமை தொடருங்கள்.
ReplyDelete