Monday, 28 February 2011

வணக்கம் மக்களே!




வணக்கம். இதுவும் ஓர் தமிழ் தொழில்நுட்ப பதிவுத்தளம் தான். ஆனால் மற்றவர்களை போன்று உங்களுக்கு எல்லாம் தெரிந்த விடயங்களை எழுதாமல் ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த பலராலும் அறியப்படாத கணனி மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை நான்  உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகின்றேன். முடிந்தவரை வாரத்திற்கு ஒரு பதிவு என்ற வகையில் பதிவுகளை இடலாம் என எண்ணியுள்ளேன். பார்க்கலாம். நான் ஒன்றும் பதிவுலகத்திற்கு புதியவன் அல்ல. ஏற்கனவே இரண்டு தளங்களை பேணி வந்தேன். நேரமின்மை மற்றும் ஒரு சில சொந்த காரணங்களுக்காக அவற்றை விட்டுத்தள்ள வேண்டிய கட்டாயத்தினால் அவற்றை விட்டு முற்றாக ஒதுங்கி இருந்தேன். சரி. என்னுடைய சொந்த கதை சோகக் கதை எல்லாம் இருக்கட்டும். நாம் விடயத்திற்கு வருவோம்.

இத்தளத்திலே நீங்கள் கணனி பாதுகாப்பு மற்றும் உங்கள் இணையத்தள பாதுகாப்பு போன்ற விடயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். அனேகமாக இணையப்பக்கங்களை வடிவமைத்து வழங்கும் Freelancer இதனால் பெரிதும் பயன்பெறலாம். அதைவிட கணனி Hacking, Sniffing போன்ற விடையங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பிரஜோசனமான ஒரு தளமாக இருக்கும் என்பதில் எந்தவிதமாக சந்தேகமும் வேண்டாம். அத்துடன் சேர்த்து Web security auditing, vulnerable security holes, Shells, XSS, SQL injection போன்ற விடயங்களை பற்றியும் கொஞ்சம் கதைக்கலாம் என இருக்கின்றேன். சரி. இன்றிலிருந்து தொடங்குவோம் எங்கள் வெற்றிப்பயணத்தினை.

நன்றி. [SpiderBoil66]


4 பின்னுாட்டங்கள்:

  1. இந்தத்தளம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. இந்தத்தளம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. நன்றி நண்பர்களே. கலக்குவோம். :)

    ReplyDelete