Tuesday, 1 March 2011

HACKERS [கொந்தர்கள்]




இன்று முதல் பதிவே கொந்தர்கள் பற்றியது. சரி. நீங்கள் சிந்திப்பது எனக்கு விளங்குகின்றது. அது என்ன ‘கொந்தர்‘ என்று தானே ஜோசிக்கின்றீர்கள்? கொந்தர் என்பது ஆங்கில வார்த்தையான HACKER என்பதன் தமிழ் வடிவம். ஆம்! இன்று நாங்கள் அவர்களை பற்றி தான் பார்க்கப்போகின்றோம்.

தற்காலத்திலே கொந்தர்கள் பல வகையினர் இருந்தாலும் குறிப்பாக இனங்கண்டு வகைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் மூன்று பிரிவினரே. அவர்களில் WHITE HAT HACKER, GREY HAT HACKER, BLACK HAT HACKER. என மூன்று பிரிவுகளாக பிரிவுபடுத்திப்பார்க்கின்றது இந்த தொழிநுட்ப சமூகம். சரி. இந்த மூன்று குழுவினரையும் பற்றி சற்று விரிவாக பார்த்து விடலாம். 

WHITE HAT HACKERS

இந்த வகையினில் அடங்குபவர்கள் தான் தற்போது வெளியே வந்த மற்றும் வரவிருக்கின்ற கணனி வைரஸகள்  போன்ற வற்றோடு  போராடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆம். இவர்கள் சட்டரீதியாக கொந்தர் என ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்கள் பொதுவாக பெரிய பெரிய Antivirus software கம்பனிகளிலே வேலை பார்ப்பவர்கள். இவர்களில் அனேகர் தங்கள் அறிவை நல்ல விதத்தில் பயன்படுத்துபவர்கள். ஒ்வொரு சந்தேகத்திற்கிடமான கோப்புக்களையும் பரிசீலித்து அவற்றுள் புதைந்து கிடக்கும் வைரஸ்களை கண்டு பிடித்து அவற்றை எதிர்ப்பதற்கான Antivirus Database ல் தரவுகளை ஏற்றி எங்களின் பாவனைக்கு தருபவர்கள். நீங்களும் கணனியில் Hacking, Sniffing ல் ஆர்வம் உடையவர் என்றால் அதற்கான பாடநெறிகள் இருக்கின்றன. அவற்றினை கற்பதன் மூலம் நீங்களும் ஓர் கணனி பாதுகாப்பு வல்லுனர் ஆகலாம். மேலதிக தகவல்களுக்கு இந்த தளத்திற்கு செல்லுங்கள்.


GREY HAT HACKERS

இந்த Grey Hat Hackers பாதி நல்லவர்கள். பாதி கெட்டவர்கள். ஆம். உதாரணமாக சொல்லபோனால், காலையில் நல்ல பிள்ளை போன்று அலுவலகம் சென்று வந்து விட்டு பின்னர் இரவு நேரங்களில் அல்லது நேரம் கிடைக்கும் பொழுது வைரஸ்கள் உருவாக்குதல், தகவல் திருட்டு, REVERSE ENGINEERING, CRACKING, DECODING, போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். அத்துடன் இவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் மிகவும் உண்மையாக உழைப்பவர்களாக இருப்பார்கள். இந்த வகையினில் சொல்லுமளவுக்கு அதிகமான கொந்தர்கள் இல்லை. 

BLACK HAT HACKERS  

இணையத்திலே ஏற்படுகின்ற பாதி பிரச்சனைகளுக்கு சூத்திரதாரிகள் இவர்கள் தான். சாதாரண மின்னஞ்சல் கடவுச்சொல் திருட்டு தொடக்கம் பெரிய பெரிய இணையத்தளங்களின் முறிவுக்கு காரணமாக இருப்பவர்கள் இவர்கள் தான். இவர்களால் தான் WHITE HAT HACKERS எந்த நாளும் வேலையாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு கெட்டிக்காரர்கள். இவர்கள் அனேகமாக WEB SITE HACKING & UPLOADING SHELLS, BACK DOORING SITES, BACK DOORING COMPUTERS, CRACKING SOFTWARES, CREATING SPYWARES, CREATING VIRUS'S, SPREADING VIRUS FILES, GAINING UNAUTHORIZED ACCESS TO THE SERVERS. இப்படியான வேலைகளில் ஈடுபடுபவர்கள். இவர்கள் அதி புத்திசாலிகள். ஆனால் அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தாமல் தீய வழிகளிலே பயன்படுத்தி பணம் பார்ப்பவர்கள். சிலர் இதனை ஒரு பொழுதுபோக்காகவும் செய்து வருகின்றார்கள். 


சரி. இவ்வாறு எவ்வளவு சுருக்கமாக கூறமுடியுமோ அவ்வளவு சுருக்கமாக நான் இந்த கொந்தர்கள் பற்றி கூறியிருந்தேன். ஆனால் இவர்கள் அனைவருக்கும் மேலாக இன்னும் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள். அவர்களை SUICIDE HACKERS என்று அழைக்கின்றார்கள். ஏன் என்றால் இவர்கள் தங்கள் உடலில் வெடிபொருட்களை நிறைத்துக்கொண்டு தகவல் மையங்கள் மீது பாய்ந்து தற்கொலை தாக்குதல் நடத்துபவர்கள். இது என்னோ சினிமா பார்த்த மாதிரியே இருக்கு. என்ன அப்படித்தானே? இந்த கணனி பாதுகாப்பு சம்பந்தமான உலகம் சற்று பெரியது தான். வருகின்ற வாரம் ஒரு வித்தியாசமான வீடியோ பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன்.


அது சரி. எல்லாம் இருக்கட்டும் நான் வந்து எந்த வகை கொந்தர்? நீங்கள் சிந்திப்பது எனக்கு புரிகின்றது. நான் வந்து ஒரு Black hat கொந்தராக இருந்து White hat கொந்தராக மாறியிருக்கின்றேன். ஏன் எதுக்கு என்ற பதிலுடன் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.


நன்றி [Spiderboil66]

  

11 பின்னுாட்டங்கள்:

  1. நல்ல விளக்கம் ......

    நன்றி................

    ReplyDelete
  2. இன்னும் பல பதிவுகளை மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்........

    ReplyDelete
  3. உங்கள் கருத்துரைக்கு நன்றி முத்துவேல். நிச்சயமாக ஒரு புதிய வித்தியாசமான பதிவு அடுத்து வரவிருக்கின்றது.

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு! உங்கள் பதிவுகள் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!
    நன்றி...

    ReplyDelete
  5. அப்ப உங்ககிட்ட ரொம்ப ஜhக்கிரதையாத்தான் இருக்கனும்.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. இன்டலி ஓட்டு பட்டை நிறுவுங்க

    ReplyDelete
  7. உங்கள் கருத்துரைக்கு நன்றி தமிழ் மகன். :)

    ReplyDelete
  8. நன்றி திரு.பெருங்காயம் அவர்களே. நீங்க எல்லாம் பெரிய ஆளுக. நாம சின்ன பயபுள்ளங்க. இப்பதானே வந்திருக்கம். பார்ப்போம். உங்கள் கருத்துரைக்கு நன்றி. By the way, நல்ல பதிவுகள். :)

    ReplyDelete
  9. நானும் இதைப்பற்றி தெரிந்துகொள்ள விருப்பப்புடுகிறேன்..(நல்லனவற்றிற்கான).. எனக்கும் சொல்லிக்கொடுங்களேன்.

    ReplyDelete
  10. உங்கள் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் இனி வரும் பதிவுகள் அமையும் என்பதில் நீங்கள் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். கலக்குவோம். கருத்திற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete